இந்தியா

ஹரியாணாவில் இன்று முதல் மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு

ANI

ஹரியாணாவில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், இன்று முதல் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவிவரும் நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு வருகின்றது. 

அந்தவகையில், ஹரியாணாவில் இன்று காலை 5 மணி முதல் மே 17-ஆம் தேதி காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அம்மாநில அரசு  உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. திருமணம், இறுதிச்சடங்கில் 11 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஹரியாணா சுகாதார அமைச்சர் அனில் விஜி  தெரிவித்துள்ளார். 

முன்னதாக மே 3 முதல் மே 10 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கரோனா பரவலைத் தடுக்கும்வகையில் மேலும் ஒருவாரம்  பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13,548 பேருக்குத் தொற்று பரவியுள்ளது. மேலும் 151 பேர் இறந்துள்ளனர். அதேசமயம் 12,639 பேர்  நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT