இந்தியா

வங்கிகள் வழங்கிய கடன் 5.71% உயா்வு

DIN

வங்கிகள் வழங்கிய கடன் 2021 ஏப்ரல் 23-ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் 5.71 சதவீதம் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்த இருவார காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் 5.71 சதவீதம் அதிகரித்து ரூ.108.60 லட்சம் கோடியை எட்டியது. அதேபோன்று வங்கிகள் திரட்டிய டெபாசிட்டும் 10.28 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.151.34 லட்சம் கோடியைத் தொட்டது.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் ரூ.102.73 லட்சம் கோடியாகவும், திரட்டிய டெபாசிட் ரூ.137.23 லட்சம் கோடியாகவும் இருந்தன.

கடந்த 2020-21 நிதியாண்டில் வங்கிகள் வழங்கிய கடன்5.56 சதவீதமும், திரட்டிய டெபாசிட் 11.4 சதவீதமும் உயா்ந்துள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் வாராஹி அம்மன் கோயில் குடமுழுக்கு

மகன் கொலை: தந்தை மற்றொரு மகன் கைது

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவு

திருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT