இந்தியா

மூத்த குடிமக்களை தில்லி அரசே ராமர் கோயில் அழைத்துச் செல்லும்: கேஜரிவால்

10th Mar 2021 08:18 PM

ADVERTISEMENT


அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டவுடன் மூத்த குடிமக்களை அரசே அங்கு அழைத்துச் செல்லும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை தெரிவித்தார்.

தில்லி பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது கேஜரிவால் பேசுகையில், "நான் ராம பக்தன். ராமரின் வாழ்க்கையிலிருந்து ஈர்க்கப்பட்ட வளர்ச்சிக்கான 10 திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்" என்றார்.   

தில்லியில் ராம ராஜ்ஜியம் அமைக்க அரசு பின்பற்றும் 10 திட்டங்களாக கேஜரிவால் குறிப்பிடுபவை:

1. தில்லியில் ஒருவர்கூட பசியுடன் தூங்கக் கூடாது என்பதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது.

ADVERTISEMENT

2. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஒவ்வொரு ஏழைக் குழந்தைகளுக்கும் சம வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய அரசு செயல்பட்டு வருகிறது. 

3. அனைத்து மக்களுக்கும் இலவச மற்றும் மேம்பட்ட சுகாதார சேவை வழங்குவதை உறுதி செய்ய ஆம் ஆத்மி அரசு செயல்பட்டு வருகிறது.

4. வீடுகளுக்கு 200 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்க தில்லி அரசு வழிவகை செய்துள்ளது. தில்லி ராம ராஜ்ஜியம் திட்டத்தின் ஒரு அங்கம் இது.

5. தில்லியில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20,000 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கும் வகையில் ஆம் ஆத்மி அரசு வழிவகை செய்துள்ளது.

6. தில்லி அரசின் வேலைவாய்ப்பு தளங்கள், தொழில் தொடங்குவதற்கான முன்னெடுப்புகள் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் மூலம் லட்சக்கணக்கான வேலையில்லாதவர்கள் பயனடைகின்றனர்.

7. குடிசை வாழ் பகுதியில் வீடு கட்டித் தருவது ராம ராஜ்ஜிய திட்டத்தின் அங்கம். 

8. பெண்களுக்குப் பாதுகாப்பு: காவல் துறை தில்லி அரசின் கீழ் இல்லை. ஆனால், தற்போது அது விவாதத்துக்குரிய விஷயம் அல்ல. யார் பொறுப்போ அவர்கள் அதைச் செய்ய வேண்டும். எங்கள் தரப்பில் பொறுப்புடன் செயல்படுகிறோம். சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, பெண்களுக்கு இலவச போக்குவரத்து சேவை வழங்கப்பட்டுள்ளது, பேருந்துகளில் காவலர்களை நியமித்துள்ளோம்.  

9. மூத்த குடிமக்களுக்கு மரியாதை: அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டவுடன், ஆன்மிகப் பயணமாக மூத்த குடிமக்களை தில்லி அரசே அயோத்தி அழைத்துச் செல்லும்.
 
10. தில்லி அரசின் கீழ் அனைவரும் சமம்.

Tags : kejriwal
ADVERTISEMENT
ADVERTISEMENT