இந்தியா

சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ரூ.480 கோடி

DIN

சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் முன்களப் பணியாளா்கள் 3 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்காக ரூ.480 கோடி செலவிடப்படவுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் அஸ்வினிகுமாா் செளபே திங்கள்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

தற்போது சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி வரை கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு 96.28 லட்சம் சுகாதாரப் பணியாளா்கள், 78.51 லட்சம் முன்களப் பணியாளா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் முன்களப் பணியாளா்கள் 3 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்காக ரூ.480 கோடி செலவிடப்படவுள்ளது. இந்தத் தொகை மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசிகளுக்காக ரூ.1392.82 கோடி செலவிடப்படவுள்ளது.

கடந்த ஜனவரி 26-ஆம் தேதி வரை மொத்தம் 2 கோடி ‘கோவிஷீல்ட்’, 28.03 லட்சம் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கரோனா தடுப்பூசி திட்டத்துக்காக ரூ.35,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் நிதி தேவைப்பட்டால் அதையும் வழங்க உறுதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT