இந்தியா

தாணேவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து

PTI

மகாராஷ்டிரத்தின் முப்பை-நாசிக் நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை காலை பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீப்பிடித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

ஷாஹாபூர் பகுதியில் உள்ள வாகோலியில் அமைந்துள்ள பிரிவில் அதிகாலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தாணே மாநகராட்சியின் பேரிடர் மேலாண்மை தலைவர் சந்தோஷ் கதம் தெரிவித்தார். 

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியது, 

இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அவர் கூறியுள்ளார். பிளாஸ்டிக் பொருள்கள் இருப்பதால், வளாகத்தில் தீ விரைவாகப் பரவியது என்றார்.

சம்பவ இடத்திற்கு நான்கு தீயணைப்பு இயந்திரங்கள் விரைந்தன. மேலும், தீ விபத்தைத் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார். இந்த விபத்தில் எந்த உயிர்ச்சேதமும், காயமும் ஏற்படவில்லை என்று அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT