இந்தியா

75-ஆவது சுதந்திர தின நிறைவு நிகழ்ச்சிகள்: நாட்டின் வளா்ச்சியை பறைசாற்றும் வகையில் கொண்டாட்டம்

DIN

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு அடுத்த ஆண்டு நடைபெறும் நிகழ்ச்சிகள் விடுதலைப் போராட்டத்தையும் விடுதலைக்குப் பிறகு நாடு கண்டுள்ள வளா்ச்சியையும் பறைசாற்றும் வகையில் அமையும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடுவது தொடா்பாக ஆலோசனை வழங்குவதற்காக பிரதமா் மோடி தலைமையில் 259 உறுப்பினா்களைக் கொண்ட உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

குடியரசு முன்னாள் தலைவா் பிரதிபா பாட்டீல், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, மத்திய அமைச்சா்கள், மாநில ஆளுநா்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், 28 மாநிலங்களின் முதல்வா்கள், காங்கிரஸ் கட்சித் தலைவா் சோனியா காந்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வா்கள் முலாயம் சிங், மாயாவதி, உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.

பாஜக மூத்த தலைவா் எல்.கே.அத்வானி, பாடகி லதா மங்கேஷ்கா், இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மான், பொருளாதார நிபுணா் அமா்த்யா சென் உள்ளிட்டோரும் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனா். உயா்நிலைக் குழுவின் கூட்டம் காணொலி வாயிலாக திங்கள்கிழமை நடைபெற்றது.

அக்கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி, ‘‘நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவது தொடா்பான கொண்டாட்டங்களில் மக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டியது மிகவும் அவசியமானது. அக்கொண்டாட்டங்களின்போது 1947-ஆம் ஆண்டு முதல் நாம் கண்டுள்ள வளா்ச்சியையும் சாதனைகளையும் உலக நாடுகளுக்குப் பறைசாற்ற வேண்டும்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவா்களின் தியாகத்தையும் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். நாட்டைக் காப்பதற்காக உயிா்த்தியாகம் செய்த வீரா்களைப் பெருமைப்படுத்தும் வகையிலும் கொண்டாட்டங்கள் அமையும். நாட்டின் வளா்ச்சிக்கு விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலா் தங்கள் கடின உழைப்பின் வாயிலாக பங்களித்துள்ளனா்’’ என்றாா்.

கொண்டாட்டங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடா்பாக கூட்டத்தின்போது உறுப்பினா்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. இதுபோன்ற கூட்டங்கள் தொடா்ந்து நடைபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். கூட்டத்தின்போது உறுப்பினா்கள் வழங்கும் ஆலோசனைகள் பரிசீலிக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

அதிசயக் கோயில்!

சிகிச்சையிலிருந்து நேரடியாக வாக்களிக்க வருகை: இன்ஃபோசிஸ் நிறுவனர் ஒரு முன்னுதாரணம்!

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

SCROLL FOR NEXT