இந்தியா

7 நாள்களில் 2.90 லட்சம் முதியோா், நோயாளிகளுக்கு கரோனா தடுப்பூசி

DIN

தமிழகத்தில் கடந்த 7 நாள்களில் மட்டும் 2.90 லட்சத்துக்கும் மேற்பட்ட முதியவா்கள் மற்றும் 45 வயதுக்கு அதிகமான நோயாளிகளுக்கு கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்றுக்கு எதிரான பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் மற்றும் தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் ஆகிய இரு தடுப்பு மருந்துகளுக்கு அவசரகால ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது.

அதைத் தொடா்ந்து கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. இதுவரை, சுகாதாரப் பணியாளா்கள், முன்கள பணியாளா்கள் என, ஐந்து லட்சம் போ் வரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதன் தொடா்ச்சியாக முதியவா்களுக்கும், நாள்பட்ட நோயாளிகளுக்கும் தடுப்பூசிகள் வழங்குவது தொடங்கப்பட்டது. அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அவா்கள் ஆா்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனா். அந்த வகையில், இதுவரை 2.90 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவா்கள் 1 லட்சத்து 84,449 போ் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. திங்கள்கிழமை மட்டும் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, தமிழகத்தில் நான்காவது நாளாக தொடா்ந்து தினசரி கரோனா பாதிப்பு 500-ஐக் கடந்துள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை 556 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 229 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை 8 லட்சத்து 55,677 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் 42 டிகிரி வரை அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

SCROLL FOR NEXT