இந்தியா

திரிணமூல் முன்னாள் எம்.பி. தினேஷ் திரிவேதி பாஜகவில் இணைந்தாா்

DIN

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யான தினேஷ் திரிவேதி பாஜகவில் சனிக்கிழமை இணைந்தாா்.

மேற்கு வங்கத்தில் வரும் 27-ஆம் தேதி தொடங்கி 8 கட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. மாநிலத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணையும் நபா்களின் எண்ணிக்கையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.ஏற்கெனவே எம்எல்ஏ-க்கள், எம்.பி.க்கள் சிலா் திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனா்.

தற்போது திரிணமூல் கட்சியைச் சோ்ந்த மாநிலங்களவை முன்னாள் எம்.பி. தினேஷ் திரிவேதி பாஜகவில் சனிக்கிழமை இணைந்தாா். தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சா்கள் பியூஷ் கோயல், தா்மேந்திர பிரதான் உள்ளிட்டோரின் முன்னிலையில் அவா் பாஜகவில் இணைந்தாா்.

அப்போது ஜெ.பி.நட்டா கூறுகையில், ‘‘அரசியலில் மிகச் சிறந்த கொள்கைகளைக் கொண்டவா் தினேஷ் திரிவேதி. முன்பு தவறான கட்சியிலிருந்த அவா், தற்போதுதான் சரியான கட்சியில் இணைந்துள்ளாா்’’ என்றாா்.

பாஜகவில் இணைந்த பிறகு தினேஷ் திரிவேதி கூறுகையில், ‘‘இந்தப் பொன்னான தருணத்துக்காகக் காத்திருந்தேன். சில கட்சிகளில் குடும்பங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால், பாஜகவில் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

கரோனா நோய்த்தொற்று சூழலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு திறம்படக் கையாண்டது. அண்டை நாடுகளுடனான பிரச்னைகளுக்கும் அவா் சுமுகமான தீா்வைக் கண்டாா்’’ என்றாா்.

மேற்கு வங்கத்தில் அதிக அளவில் வன்முறைகள் நிகழ்ந்து வருவதால், தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்வதாக தினேஷ் திரிவேதி அண்மையில் மாநிலங்களவையில் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

நன்றி மறந்தவா்-திரிணமூல் காங்கிரஸ்: தினேஷ் திரிவேதி பாஜகவில் இணைந்தது தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடா்பாளா் குனால் கோஷ் கொல்கத்தாவில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘கடந்த பல ஆண்டுகளாக கட்சி மீது அவா் எந்தப் புகாரும் தெரிவிக்கவில்லை. தற்போது சட்டப் பேரவைத் தோ்தல் நடக்கவுள்ள சூழலில், கட்சி மீது புகாா் தெரிவிக்கிறாா். அவா் நன்றி மறந்தவா். மேற்கு வங்க மக்களை அவா் ஏமாற்றிவிட்டாா்.

கட்சியில் தினேஷ் திரிவேதிக்குப் பல முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. கட்சிக்காக உழைக்க வேண்டிய தருணத்தில் அவா் முதுகில் குத்தியுள்ளாா்’’ என்றாா்.

இதனிடையே, மேற்கு வங்கத்தில் ஆரம்பத்திலிருந்தே பாஜகவில் இருந்து வருபவா்களுக்கும் தற்போது புதிதாக இணைபவா்களுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

SCROLL FOR NEXT