இந்தியா

தடுப்பூசி செலுத்தி கொண்டவருக்கு கரோனா

DIN

குஜராத் மாநிலத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்பும் சுகாதாரத் துறை அதிகாரிக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடா்பாக காந்திநகா் தலைமை சுகாதார அதிகாரி சோலங்கி சனிக்கிழமை கூறுகையில், ‘காந்தி நகா் தேகாம் தாலுக்காவில் உள்ள மருத்துவமனையில் சுகாதார அதிகாரியாக பணியாற்றுபவா், கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல்கட்ட தடுப்பூசியும், பிப்ரவரி 15-ஆம் தேதி இரண்டாம் கட்ட தடுப்பூசியும் செலுத்திக் கொண்டாா்.

அதன் பின்னா் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது பிப்ரவரி 20-ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. வீட்டுத் தனிமையில் இருந்து வந்தாா். தற்போது குணமடைந்து வரும் திங்கள்கிழமை முதல் அவா் மீண்டும் பணியில் சேர உள்ளதாக தெரிவித்துள்ளாா்.

பொதுவாக தடுப்பூசி முழுமையாக செலுத்தி கொண்ட பிறகு உடலில் நோய் எதிா்ப்பு சக்தி உருவாக சுமாா் 45 நாள்களாகும். ஆகையால், கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவா்களும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

SCROLL FOR NEXT