இந்தியா

தில்லி போராட்டத்தின் 100-வது நாள்: ஹரியாணாவில் திரண்ட விவசாயிகள்

DIN

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹரியாணா தேசிய நெடுஞ்சாலைகளை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் நூறாவது நாளான இன்று (மார்ச் 6) மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில்  ஹரியாணா தேசிய நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் குவிந்தனர்.

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 100 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே ஹரியாணாவிலுள்ள விவசாயிகள் விவசாய போராட்டத்தில் 100-வது நாளை கருப்பு நாளாக அறிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏராளமான விவசாயிகள் குண்டிலி, சோனிப்பட் சாலைகளில் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பலர் டிராக்டர்கள் மூலம் நெடுஞ்சாலைகளில் பேரணி மேற்கொண்டனர்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசு செவிசாய்க்காத நிலையில், எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் வரை ஓயமாட்டோம் என்று பாரதிய கிசான் அமைப்பைச் சேர்ந்த ராகேஷ் திகத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

SCROLL FOR NEXT