இந்தியா

தேர்தலைக் கொண்டாடும் கொல்கத்தா இனிப்பகம்

5th Mar 2021 04:44 PM

ADVERTISEMENT


கொல்கத்தா: தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

தேர்தல் பிரசாரங்களுக்கு இடையே அரசியல் கட்சிகளின் கொடி, பதாகை, சுவரொட்டி தயாரிப்புப் பணிகளும் களைகட்டியுள்ளது.

இந்த நிலையில், கொல்கத்தாவில் உள்ள பலராம் மாலிக் ராதாராமன் மாலிக் என்ற பிரபலமான இனிப்பகம், தேர்தல் சின்னங்களையும், தேர்தல் வாசகங்களையும், அரசியல் கட்சித் தலைவர்களின் உருவம் பொறித்த இனிப்புகளையும் தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

தேர்தல் வாசகங்கள் அடங்கிய இனிப்புகளைத் தயாரிக்குமாறு நாள் ஒன்றுக்கு 150 ஆர்டர்கள் வருவதாகவும் இனிப்பக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

கடையில் பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் புகைப்படங்கள் இடம்பெற்ற இனிப்புகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருப்பது, கடைக்கு வருவோரை அதிகளவில் கவர்ந்துள்ளது.
 

Tags : kolkatta election sweets
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT