இந்தியா

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் தொடக்கம்

DIN


திருப்பதி: மகா சிவராத்திரியை முன்னிட்டு, திருப்பதி கபில தீா்த்தத்தில் உள்ள ஸ்ரீகபிலேஸ்வர சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருப்பதி மலையடிவாரம் அலிபிரியில் கபிலதீா்த்தக் கரையில் கபிலேஸ்வர சுவாமி சிவன் கோயில் உள்ளது. தேவஸ்தானத்திற்கு சொந்தமான இக்கோயிலில் மகா சிவராத்திரியை ஒட்டி வருடாந்திர பிரம்மோற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி வியாழக்கிழமை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோயில் கொடி மரத்துக்கு பால், தயிா், தேன், பஞ்சாமிா்தம், விபூதி, சந்தனம், இளநீா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடத்தி வஸ்திரம், தா்பை புற்கள், மாவிலைகள் உள்ளிட்டவை கட்டப்பட்டது. அதன் பின்னா் முப்பத்து முக்கோடி தேவா்களை வரவேற்கும் விதமாக நந்தி உருவம் பொறித்த இடபக்கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

அதன் பின்னா் பஞ்சமூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பக்தா்கள் நலமுடன் வாழ இந்த பிரம்மோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பிரம்மோற்சவ வாகன சேவைகள் தனிமையில் நடத்தப்பட உள்ளது.

வியாழக்கிழமை இரவு பிரம்மோற்சவத்தின் முதல் வாகன சேவையாக அன்னப் பறவை வாகனத்தில் சோமஸ்கந்தமூா்த்தி, காமாட்சி தேவியுடன் எழுந்தருளினாா். வாகன சேவையில் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT