இந்தியா

கேரளத்தின் வளர்ச்சிக்கு புதிய உத்தி தேவை

DIN

கேரளத்தில் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டினார். மேலும், மக்களிடையே சகோதரத்துவத்தின் பிணைப்பை வலுப்படுத்துவதற்கும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் புதிய உத்தி தேவை என அவர் வலியுறுத்தினார்.
 ராஜீவ் காந்தி மேம்பாட்டு கல்வி நிறுவனம் (ஆர்.ஜி.ஐ.டி.எஸ்.) சார்பில் திருவனந்தபுரத்தில் "பிரதீக்ஷô 2030' உச்சிமாநாடு காணொலி முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆர்.ஜி.ஐ.டி.எஸ். என்பது காங்கிரஸின் சித்தாந்தத்துடன் இணைந்த ஒரு பொருளாதார சிந்தனைக் குழுவாகும். இக்குழு இந்தியாவிலும், வெளிநாட்டிலும் விரிவான ஆலோசனை மேற்கொண்டு, அடுத்த பத்தாண்டுகளில் கேரள வளர்ச்சிக்கான செயல் திட்டத்தைத் தயாரிப்பதற்காக இம்மாநாடு நடைபெற்றது. இதில், காணொலி முறையில் பங்கேற்று, சோனியா காந்தி பேசியதாவது:
 சமூக ஒற்றுமையை எவ்வாறு பாதுகாப்பது, மேம்படுத்துவது என்பது குறித்து நாட்டின் பிற பகுதிகளுக்கு கேரளம் ஒரு பாடமாக இருந்துவந்தது. ஆனால், இன்று சமூக நல்லிணக்கம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வியக்கத்தக்க, மாறுபட்ட சமூகத்தின் தனி அடையாளங்களாக இருந்த சகோதரத்துவத்தின் பிணைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.
 கடந்த 6 தசாப்தங்களுக்கும் மேலாக பொது சுகாதாரம், கல்வியறிவு, பாலின அதிகாரம், சமூக நீதி போன்ற துறைகளில் இம்மாநிலம் முன்மாதிரியாகத் திகழ்ந்து பல சாதனைகளைப் படைத்தது. ஆனால், இப்போது பல்வேறு புதிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. கரோனா தொற்று காரணமாக இந்த சவால்கள் மேலும் அதிகரித்துள்ளன. அதேநேரம், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பு குறித்த புதிய சிந்தனைக்கு அழைப்புவிடுத்துள்ளது.
 முதலீடுகளைப் புதுப்பிக்க, உற்பத்தியைப் பெருக்கி வேலைவாய்ப்புகளை உருவாக்க, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, இயற்கை பேரழிவுகளை மட்டுப்படுத்த, விவசாயிகள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சமூக பாதுகாப்பு, அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்த என, பொருளாதார வளர்ச்சியைப் பற்றிய புதிய சிந்தனைக்கு இதுவே உரிய நேரம்.
 மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆவணம் வெறும் பார்வைக்கானதல்ல; மாநில மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான விரிவான முன்வைக்கும் செயல்திட்ட ஆவணமாகும். காங்கிரஸ் கட்சி விரைவில் மாநில மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்து, இதைச் செயல்படுத்தத் தொடங்கும் என விரும்புகிறேன் என்றார் அவர்.
 மாநாட்டை சிறப்பாக நடத்தியதற்காக கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா தலைமையிலான ஆர்.ஜி.ஐ.டி.எஸ். குழுவுக்கும், அதன் இயக்குநர் பி.எஸ். ஷிஜுவுக்கும் சோனியா பாராட்டு தெரிவித்தார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு எம்எல்ஏ-க்கள் கடிதம்

சந்தேஷ்காளியில் சிபிஐ சோதனை: ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம்: எதிா்ப்பு தெரிவித்து வழக்கு

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு: நிதித் துறை தகவல்

SCROLL FOR NEXT