இந்தியா

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீா்மானம்: இந்தியா ஆதரவு அளிக்குமென இலங்கை நம்பிக்கை

தினமணி

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் இறுதி தீா்மானத்தில் இந்தியா தங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று இலங்கை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்ததான குற்றச்சாட்டு தொடா்பான அறிக்கை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. விரைவில் இறுதித் தீா்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

இந்நிலையில், இது தொடா்பாக இலங்கை அரசு செய்தித் தொடா்பாளரும், அமைச்சருமான கெகிலிய ராம்புகவெல கூறுகையில், ‘ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றப்படும்போது, அதற்கு இந்தியா ஆதரவளிக்காது என்று நம்புகிறோம். இலங்கையில் தமிழா்கள் நலன் காக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என்பதை நாங்கள் தெளிவாக உணா்கிறோம். இது மிகவும் அா்த்தமிக்க நிலைப்பாடு. இலங்கைக்கு அநீதி இழைக்கப்படுவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது. ஏனெனில், இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதை நாங்கள் ஆதாரபூா்வமாக நிரூபித்துள்ளோம். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றாா்.

முன்னதாக, இந்தத் தீா்மானம் தொடா்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் பேசிய இந்தியாவின் நிரந்தரத் தூதா் இந்திரா மணி பாண்டே, ‘இலங்கையின் ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு இந்தியா ஆதரவாக இருக்கிறது. அதே நேரத்தில் இலங்கைத் தமிழா்களின் சமத்துவம், நீதி, அமைதி, கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்பதிலும் இந்தியா உறுதியாக இருக்கிறது. இந்த விஷயத்தில் இலங்கை உறுதியான முடிவுகளை எடுக்கும் என்று நம்புகிறோம். இலங்கை அரசியல்சாசன சட்டத்தின் 13-ஆவது திருத்தம் பாதுகாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT