இந்தியா

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு தொடர்கிறது

3rd Mar 2021 06:01 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப், தமிழகம், குஜராத் மற்றும் கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட புதிய பாதிப்பில் 85.95 சதவீதம் பேர் இந்த 6 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் 14,989 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 7,863 பேருக்கும், கேரளத்தில், 2.938 பேருக்கும், பஞ்சாப்பில் 729 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மகாராஷ்டிரம், பஞ்சாப், குஜராத், மத்தியப் பிரதேசம், தில்லி, ஹரியாணா மற்றும் கர்நாடகத்தில் புதிய பாதிப்புகள் ஒவ்வொரு வாரமும் அதிகமாக உள்ளது.

மகாராஷ்டிரத்தில் மட்டும் ஒரு வாரத்தில் 16,012 பேருக்கு தொற்று அதிகரித்துள்ளது. கரோனா சிகிச்சை பெறுபவர்கள் அதிகமாக உள்ள மாநிலங்கள் மற்றும் நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகரிக்கும் மாநிலங்களுடன் மத்திய அரசு தொடர்ந்து பேசி வருகிறது. கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் கரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்தும்படி மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகின்றன.

கரோனா பாதிப்பு அதிகரித்த மாநிலங்களில் மத்தியக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொற்று அதிகரிப்புக்கான காரணத்தை கண்டறிவர். நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 1,70,126-ஐ கடந்தது. இது மொத்த பாதிப்பில் 1.53 சதவீதம்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி போடும் பணி கடந்த 1ம் தேதி தொடங்கியது. முதல் டோஸ் தடுப்பூசி சுகாதாரப் பணியாளர்கள் 67,42,187 பேருக்கும், 2வது டோஸ் தடுப்பூசி சுகாதாரப் பணியாளர்கள் 27,13,144 பேருக்கும், முன்களப் பணியாளர்களில் 55,70,230 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், முன்களப் பணியாளர்களில் 834 பேருக்கு 2வது டோஸ் தடுப்பூசியும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் 71,896 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5,22,458 பேருக்கும் கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மொத்தத்தில் இன்று காலை 7 மணி வரை 1.56 கோடிக்கும் அதிகமானோருக்கு (1,56,20,749) கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 46ம் நாளான நேற்று 7,68,730 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கொவிட் தொற்றிலிருந்து இதுவரை 1.08 கோடி பேர் (1,08,12,044) குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 13, 123பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், கொவிட் தொற்றால் 98 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். 24 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் எந்த கொவிட்-19 இறப்புகளும் ஏற்படவில்லை.
 

Tags : coronavirus corona tamilnadu vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT