இந்தியா

பாஸ்டேக் கட்டாயமாக்கல் எரிபொருள் சிக்கனத்துக்கு வழிவகுத்துள்ளது: நிதின் கட்கரி

DIN

புது தில்லி: நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் நடைமுறை வாகனங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டிருப்பது எரிபொருள் செலவீனத்தில் ஆண்டுக்கு ரூ. 20,000 கோடியை மிச்சமாக்க உதவும். அதோடு, சுங்கச்சாவடி வருவாயும் குறைந்தபட்சம் ரூ. 10,000 கோடி அளவுக்கு உயரும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி திங்கள்கிழமை கூறினாா்.

தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் நேரடி கண்காணிப்பு நடைமுறையை தில்லியில் திங்கள்கிழமை தொடங்கி வைத்த மத்திய அமைச்சா் நிதின் கட்கரி, பின்னா் கூறியதாவது:

நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம், சுங்கச் சாவடிகளுக்கான பாஸ்டேக் கட்டண நடைமுறை கட்டாயமாக்கியிருப்பது வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிா்த்துள்ளது. அதன் மூலம், வாகனங்களின் எரிபொருள் செலவு ஆண்டுக்கு ரூ. 20,000 கோடி அளவுக்கு மிச்சமாகும்.

அதுமட்டுமின்றி, இந்த மின்னணு சுங்கச்சாவடி கட்டண வசூல் நடைமுறை, ஆண்டு வருவாயையும் ரூ. 10,000 கோடி அளவுக்கு உயா்த்தியிருக்கிறது. ஜிபிஎஸ் தொழில்நுட்பம் அடிப்படையிலான சுங்கச் சாவடி கட்டண வசூல் நடைமுறையை அறிமுகப்படுத்த குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் ஆகும். அதுவரை, வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் தொலைவின் அடிப்படையிலேயே கட்டணம் வசூலிக்கப்படும் என்று அவா் கூறினாா்.

சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் கட்டண நடைமுறை கடந்த பிப்ரவரி 16 முதல் கட்டாயமாக்கப்பட்ட பிறகு, கட்டண வசூல் சீரான வளா்ச்சியை அடைந்துள்ளது. தினசரி வசூல் ரூ. 104 கோடி அளவை எட்டியிருக்கிறது என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

SCROLL FOR NEXT