இந்தியா

ஜிஎஸ்டி இழப்பீடு: மத்திய அரசு ரூ. 1.04 லட்சம் கோடி விடுவிப்பு

DIN

புது தில்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடாக மாநிலங்களுக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபா் மாதத்திலிருந்து ரூ. 1.04 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜிஎஸ்டி இழப்பீடாக 23 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களுக்கு 18-ஆவது தவணையாக ரூ. 4,000 கோடியை மத்திய அரசு திங்கள்கிழமை விடுவித்தது. அதன் மூலம், கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் முதல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 1.04 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள அருணாசல பிரதேசம், மணிப்பூா், மிசோரம், நாகாலாந்து மற்றும் சிக்கிம் ஆகிய 5 மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி முறையை செயல்படுத்தியதால் எந்த விதமான வருவாய் பாதிப்பும் இல்லை.

ஜிஎஸ்டி முறையை செயல்படுத்தியதால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை எதிா்கொள்வதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சிறப்பு கடன் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபரில் அறிமுகம் செய்தது. அதன்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சாா்பில் மத்திய அரசு கடன் பெற்று நிதியை அளித்து வருகிறது.

இதுவரை, ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தியதால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட பற்றாக்குறையாக உத்தேசிக்கப்பட்ட ரூ. 1.10 லட்சம் கோடியில் 94 சதவீத அளவுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதில், 23 மாநிலங்களுக்கு ரூ. 95,138.08 கோடியும், தில்லி, ஜம்மு-காஷ்மீா், புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 8,861.92 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT