இந்தியா

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர்

2nd Mar 2021 04:24 PM

ADVERTISEMENT

 

ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் கழகத்தில்(SKIMS) இன்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். 

உமர் அப்துல்லாவில் மகனும் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா தனது தாய் தந்தையுடன் முதல் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளார். 

ஸ்ரீநகர், ஸ்கிம்ஸில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி. இன்று எனது 85 வயது தந்தையும், எனது தாயும் முதல் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர். 

ADVERTISEMENT

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு நோயெதிர்ப்பு மருந்துகளை உட்கொள்வது உள்பட எனது தந்தைக்கு பல உடல்நலப் பிரச்னைகள் உள்ளன. 

இருப்பினும், அவர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். நீங்கள் அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள் என்று டிவிட்டரில் அவர் தெரிவித்துள்ளார். 
 

Tags : COVID-19 vaccine Farooq Abdullah
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT