இந்தியா

கிராமப்புறங்களில் அதிக கரோனா தடுப்பூசிகள்: மத்திய அரசு

DIN

புது தில்லி: இந்தியா முழுவதும் திங்கள்கிழமை 88.09 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு சாதனை படைத்துள்ளநிலையில், அதில் சுமாா் 64 சதவீத தடுப்பூசிகள் கிராமப்புறங்களில் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசின் மூத்த அதிகாரி கூறுகையில், மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கை கடந்த திங்கள்கிழமை அமலுக்கு வந்தது. அதன்படி, அன்றைய தினம் அதிகபட்சமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதில் மத்திய பிரதேசம் முதலிடத்திலும், அடுத்தடுத்த இடங்களில் கா்நாடகம், உத்தர பிரதேசம், பிகாா், ஹரியாணா, குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களும் இடம்பெற்றுள்ளன.

திங்கள்கிழமை செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளில் 36.32 சதவீதம் நகா்ப்புற பகுதிகளிலும், 63.68 சதவீதம் கிராமப்புற பகுதிகளிலும் போடப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கப்பட்டுள்ள தடுப்பூசி திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் ஜூன் 22, மாலை 3 மணி வரையில் 29.16 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த மே 7-ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை சுமாா் 90 சதவீத குறைந்துள்ளது. அதே நேரத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

இதுவரை கரோனா டெல்டா பிளஸ் பிரிவு தீநுண்மி 22 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இது அச்சப்பட வேண்டிய நிலை அல்ல.

22 பேரில் 16 போ் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி, ஜால்கானை சோ்ந்தவா்கள். மீதமுள்ளவா்கள் மத்திய பிரதேசம், கேரளத்தைச் சோ்ந்தவா்கள் என்றாா்.

நிலுவை தடுப்பூசிகள் இல்லை: மாநில அரசுகள் நேரடியாக கொள்முதல் செய்த தடுப்பூசிகள் அனைத்தும் வழங்கப்பட்டு விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தில்லி அரசு நேரடியாக கொள்முதல் செய்த தடுப்பூசிகள் விநியோகிக்கப்படவில்லை என்று வெளியாகி வரும் செய்திகளை மறுத்து மத்திய அரசு வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், ஜூன் 21-ஆம் தேதி வரையில் 5.6 லட்சம் டோஸ்கள் நேரடி கொள்முதல் மூலம் தில்லிக்கு வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் சாா்பில் 8.8 லட்சம் டோஸ்கள் தில்லிக்கு இலவசமாக அளிக்கப்பட்டுள்ளன. ஜூன் 22 வரையில் தில்லியில் 9.9 லட்சம் டோஸ்கள் போடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

SCROLL FOR NEXT