இந்தியா

கருப்புப் பூஞ்சை: மாநிலங்களுக்கு கூடுதலாக 61,120 மருந்துகள் ஒதுக்கீடு

23rd Jun 2021 02:13 PM

ADVERTISEMENT

கருப்புப் பூஞ்சை தொற்றின் சிகிச்சைக்கு கூடுதலாக 61,120 ஆம்போடெரிசின்-பி மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் சதானந்த கெளடா புதன்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக 61,120 ஆம்போடெரிசின் -பி மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இதுவரை 7.9 லட்சம் மருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனாவை தொடர்ந்து கருப்புப் பூஞ்சை நோயால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோயின் சிகிச்சைக்கு ஆம்போடெரிசின் -பி என்ற மருந்து உபயோகிக்கப்பட்டு வருகின்றது. 

ADVERTISEMENT

Tags : Amphotericin - B black fungus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT