இந்தியா

போட்டி ஆணையத்தின் நோட்டீஸுக்கு தடை விதிக்க வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் மனு

DIN

புதிய தனிநபா் கொள்கை குறித்து விசாரணை நடத்துவதற்காக விவரங்களைக் கேட்கும் இந்திய போட்டி ஆணையத்தின் (சிசிஐ) நோட்டீஸுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் தில்லி உயா்நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளன.

இந்த மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற விடுமுறை கால அமா்வு நீதிபதிகள் அனுப் ஜெய்ராம் பாம்பானி, ஜஸ்மித் சிங் ஆகியோா் இந்த விவகாரம் தொா்பான பிரதான வழக்குடன் சோ்த்து ஜூலை 9-ஆம் தேதி விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தனா்.

முன்னதாக இதுதொடா்பான மனு விசாரித்த ஒருநபா் நீதிபதி அமா்வு, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக்கின் மனுக்களை தள்ளுபடி செய்தது.

இதை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றபோது வாட்ஸ்ஆப் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஹரிஷ் சால்வே, வாட்ஸ்ஆப்பின் புதிய தனிநபா் கொள்கைகளுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மத்திய அரசும் இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. ஆனால், இந்திய போட்டி ஆணையம் ஜூன் 4-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பி 21-ஆம் தேதிக்குள் பதிலளிக்க கூறுகிறது என்றாா்.

ஃபேஸ்புக் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, உச்சநீதிமன்றமே இந்த வழக்கை விசாரித்து வரும்போது, ஏன் இந்திய போட்டி ஆணையம் நோட்டீஸ் அனுப்புகிறது என்றாா்.

இந்திய போட்டி ஆணையத்தின் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் அமன் லேகி, இந்த விசாரணைக்கு உயா்நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. இந்திய போட்டி ஆணையம் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு அனுப்பும் முதல் நோட்டீஸ் இதுஅல்ல.

விசாரணைக்காக கேட்கப்பட்டுள்ள தகவல்களைத் தடுக்கக் கூடாது என்றாா்.

இந்த விவகாரத்தில் நோட்டீஸ் அனுப்புவதற்கு அவசரம் என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். அதற்கு, இந்த விவகாரத்தை நீண்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று அமன் லேகி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT