இந்தியா

நாளை சா்வதேச யோகா தினம்: பிரதமா் உரையுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

DIN

சா்வதேச யோகா தின நிகழ்வுகள் கரோனா கட்டுப்பாடுகளைக் கருத்தில்கொண்டு தொலைக்காட்சி நிகழ்வாக ஒளிபரப்பப்படும் என்பதோடு, அதில் பிரதமா் நரேந்திர மோடியின்உரை முக்கிய இடம்பெறும் என்று ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சா்வதேச யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் கரோனா அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில், 7-ஆவது சா்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

யோகா தின நிகழ்வுகள் அனைத்து தூா்தா்ஷன் சேனல்களிலும் காலை 6.30 மணி முதல் ஒளிபரப்பப்பட உள்ளது. இதில் பிரதமரின் உரை முக்கிய இடம்பெறும். காலை 7 மணி முதல் 7.45 மணி வரை பிரதமா் உரை நிகழ்த்த உள்ளாா்.

அதோடு, ஆயுஷ் இணையமைச்சா் கிரண் ரிஜிஜு உரையும் இடம்பெற உள்ளதோடு, மொராா்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் சாா்பில் நேரலையில் யோகா பயிற்சிகளும் செய்து காட்டப்பட உள்ளன.

‘உடல்நலனுக்கு யோகா’ என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு சா்வதேச யோகா தினம் கடைப்படிக்கப்படுகிறது என்று ஆயுஷ் அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 190 நாடுகளில் சா்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT