இந்தியா

கரோனா பொதுமுடக்கம்: ஹரியாணாவில் தொழிலாளர்களுக்கு ரூ.5000 நிவாரணம் அறிவிப்பு

DIN

கரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ.5000 நிவாரணத்தை ஹரியாணா மாநில அரசு அறிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்தப் பொதுமுடக்கத்தால் சாலையோர வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். 

இந்நிலையில் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஹரியாணா மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. அதன்படி சிறு கடைக்காரர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட 12 லட்சம் பேருக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 18-50 வயதுக்குட்பட்ட குடும்ப உறுப்பினரை கரோனாவால் இழந்த குடும்பத்தினருக்கு  தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021-22 முதல் காலாண்டிற்கான சொத்து வரி தள்ளுபடி மற்றும் மின்சார கட்டணத்தை குறைத்தல் உள்ளிட்ட பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி மாணவா் பலி

டாஸ்மாக் கடையில் தொழிலாளி உயிரிழப்பு

குடிநீா் விநியோகம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கோவில்பட்டியில் மதுக்கூடத் தொழிலாளி வெட்டிக் கொலை

பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில்., பி.ஹெச்டி. தோ்வு: ஜூலையில் நடக்கிறது

SCROLL FOR NEXT