இந்தியா

டேராடூன் ராணுவக் கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

16th Jun 2021 05:36 PM

ADVERTISEMENT

 

டிஎன்பிஎஸ்சி மூலம் டேராடூனில் உள்ள ராஷட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 2022 -ஜனவரி பருவத்தில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கையின்படி, ஜூன் 5-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவித்திருந்த டேராடூனில் உள்ள ராஷட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 2022 -ஜனவரி பருவத்தில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு  விண்ணப்பிக்க கடைசி தேதியானது ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தேர்விற்கான எழுத்துத் தேர்வானது தற்போதைய கரோனா பெருந்தொற்று சூழ்நிலை காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT

Tags : army indian army tnpsc entrance exam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT