இந்தியா

தெலங்கானாவிலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து

DIN

பல்வேறு மாநிலங்களைத் தொடர்ந்து தெலங்கானா மாநிலத்திலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கரோனா இரண்டாம் அலை காரணமாக தேர்வு நடத்த முடியாத சூழ்நிலையில் பல்வேறு மாநிலங்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளன. 

இந்நிலையில், தெலங்கானா மாநிலத்திலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் பிளஸ் 1 மாணவர்களும் நேரடியாக பிளஸ் 2 வகுப்புக்கு தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

'மாநிலத்தில் தற்போது நிலவும் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, 2020-21 கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யப்படுகிறது. முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்படும்' என்று மாநில அரசு கூறியுள்ளது. 

அதேபோன்று பிளஸ் 1 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்றும் அவர்கள் தற்போது பிளஸ் 2 ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT