இந்தியா

ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது

14th Jun 2021 12:04 PM

ADVERTISEMENT


ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் 18 நாள்கள் முன்கூட்டியே தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் வழக்கமாக தென்மேற்குப் பருவ மழை தொடங்கும் காலத்துக்கு 17 முதல் 18 நாள்கள் முன்கூட்டியே  ஜூன் 13-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருப்பதாக அறிவிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஜம்மு - காஷ்மீரில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பரவலாக லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
 

Tags : Monsoon Jammu and Kashmir
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT