இந்தியா

கேரளத்தில் புதிதாக 11,584 பேருக்கு கரோனா: 206 பேர் பலி 

13th Jun 2021 08:34 PM

ADVERTISEMENT

 

திருவனந்தபுரம்: கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 11,584 பேருக்குத் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 206 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

கடந்த 24 மணி நேரத்தில் 11,584 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,93,625 -ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,23,003 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5,38,215 பேர் தொடர்பு கண்காணிப்பில் உள்ளனர், அவர்களில் 30,675 பேர் பல்வேறு மருத்துவமனைகளின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உள்ளனர்.

ADVERTISEMENT

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 17,856 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,78,748-ஆக அதிகரித்துள்ளது.  

கடந்த 24 மணி நேரத்தில் 206 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை மாநிலத்தில் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,181 -ஆக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 94,677 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 12.24 சதவீதம் பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  மாநிலத்தில் இதுவரை 2,12,20,925 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாவட்டங்களில், இன்று அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 1,775 பேர், திருச்சூரில் 1,373 பேர், கொல்லம் 1,312 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுள்ளது.

இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 83 பேர் வெளியிடங்களில் இருந்து மாநிலத்திற்கு வந்தவர்கள். 10,793 பேர் தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், 642 பேருக்கு தொற்று பாதிப்புக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. தொற்று பாதித்தவர்களில் 66 பேர் சுகாதார ஊழியர்கள் ஆவர்.

மாநிலத்தின் ஹாட் ஸ்பாட்களின் பட்டியலில் மேலும் இரண்டு பகுதிகள் சேர்க்கப்பட்டன, தற்போது  மொத்த ஹாட் ஸ்பாட்களின் மொத்த எண்ணிக்கை  882 -ஆக உள்ளது. 

Tags : coronavirus kerala COVID-19
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT