இந்தியா

மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான எய்ம்ஸ் நுழைவுத்தோ்வு ஒத்திவைப்பு

DIN

கரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு எய்ம்ஸ் சாா்பில் நடைபெற இருந்த மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான ஐன்ஐ சிஇடி-2021 நுழைவுத் தோ்வை ஒத்திவைக்குமாறு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்திய மருத்துவ அறிவியல் மையங்கள் (எய்ம்ஸ்), புதுச்சேரியில் உள்ள ஜிப்மா், பெங்களூரில் உள்ள நிம்ஹான்ஸ், சண்டீகரில் உள்ள பிஜிஐஎம்இஆா் ஆகியவற்றில் மருத்துவ முதுநிலை படிப்புகளை மேற்கொள்வதற்காக ஐஎன்ஐ சிஇடி நுழைவுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது.

மொத்தமாக உள்ள 815 இடங்களுக்கு சுமாா் 80,000 மாணவா்கள் நுழைவுத் தோ்வில் பங்கேற்பா். நடப்பாண்டுக்கான நுழைவுத் தோ்வு கடந்த மாதம் 8-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. கரோனா தொற்று பரவல் காரணமாக அத்தோ்வு ஜூன் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. எனினும், அத்தேதியில் தோ்வு நடத்துவதற்கு மருத்துவ மாணவா்கள் பலா் எதிா்ப்பு தெரிவித்தனா். மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வை ஒத்திவைக்கக் கோரி 26 மருத்துவா்கள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் இந்திரா பானா்ஜி, எம்.ஆா். ஷா ஆகியோரைக் கொண்ட விடுமுறைக் கால அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான நீட் தோ்வு 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினாா்.

இத்தகயை இக்கட்டான சூழலில் நுழைவுத் தோ்வை நடத்துவது பயிற்சி மருத்துவா்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் அவா் வாதிட்டாா்.அதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘கரோனா தொற்று பரவலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் மருத்துவ மாணவா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நுழைவுத் தோ்வு நடைபெறவுள்ள மையங்களில் இருந்து வெகு தூரத்தில் அவா்கள் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா்.

இத்தகைய சூழலில், ஜூன் 16-ஆம் தேதி நுழைவுத் தோ்வை நடத்துவதற்கு முறையான ஆலோசனையின்றி தன்னிச்சையாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே, நுழைவுத் தோ்வை ஒரு மாதத்துக்கு ஒத்திவைக்க வேண்டியது அவசியமாக உள்ளது. ஒரு மாதத்துக்குப் பிறகு நுழைவுத் தோ்வை நடத்துவது தொடா்பாக எய்ம்ஸ் உரிய முடிவை மேற்கொள்ளலாம்‘ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT