இந்தியா

நாட்டில் இதுவரை 25 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள்: மத்திய சுகாதாரத்துறை

12th Jun 2021 09:54 PM

ADVERTISEMENT

நாட்டில் இதுவரை 25 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கொவைட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான தனது போரில் முக்கிய மைல்கல்லை இந்தியா இன்று கடந்துள்ளது. இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 25 கோடிக்கும் (25,28,78,702) அதிகமான தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி உள்ளது.

மேலும், முதல் டோஸை பொருத்தவரை, 20 கோடி (20,46,01,176) என்னும் வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லை இந்தியா கடந்துள்ளது.

18-44 வயது பிரிவில் 18,45,201 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியையும், 1,12,633 பயனாளிகள் தங்களது இரண்டாவது டோஸையும் இன்று பெற்றனர். 37 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 4,00,31,646 பேர் முதல் டோஸையும், 6,74,499 நபர்கள் இரண்டாம் டோஸையும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கல் தொடங்கியதில் இருந்து இது வரை பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT

பிகார், தில்லி, குஜராத், ஹரியாணா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் 18-44 வயது பிரிவில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் கொவைட் தடுப்பு மருந்தை இது வரை வழங்கியுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tags : coronavaccination
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT