இந்தியா

இந்தியாவில் தொடா்ந்து தினசரி கரோனா பாதிப்பு 1.50 லட்சத்துக்கு கீழ் குறைந்தது

DIN


புது தில்லி: நாட்டில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 1,32,364 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து 8-ஆவது நாளாக தினசரி பாதிப்பு 2 லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது.

இது தொடா்பாக மத்திய செய்தி தகவல் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 16,35,993- ஆக உள்ளது. 

நாட்டில் நேற்று ஒரே நாளில் கரோனாவுக்கு 2,713 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனாவுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,40,702 -ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் கரோனாவிலிருந்து குணமடைபவா்களின் எண்ணிக்கை, தினசரி பாதிப்பைவிட தொடா்ந்து 22-ஆவது நாளாக அதிகமாக உள்ளது. வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 2,07,071 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை மொத்தம், 2,65,97,655 போ் குணமடைந்துள்ளனா். 

வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில், மொத்தம் 20,75,428 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. நாட்டில் இதுவரை மொத்தம் 35.74 கோடி (35,74,33,846) பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் போடப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 22,41,09,448 கோடியை கடந்தது. வெள்ளிக்கிழமை காலை வரை 28.75 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT