இந்தியா

ரூ.22 கோடி மதிப்பிலான 14 கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்படும்: ஆஸ்திரேலியா முடிவு

30th Jul 2021 08:43 AM

ADVERTISEMENT


புது தில்லி: இந்தியாவிலிருந்து திருடி விற்கப்பட்ட அல்லது சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டதாக நம்பப்படும் ரூ. 22 கோடி மதிப்பிலான 14 கலைப்பொருள்களை இந்தியாவிடமே திரும்ப ஒப்படைக்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.

இதற்கான அறிவிப்பை ஆஸ்திரேலியாவின் தேசிய அருங்காட்சியகம் (என்ஜிஏ) வியாழக்கிழமை வெளியிட்டது. இதில் 13 கலைப்பொருள்கள் சிலைக் கடத்தல் குற்றவாளி சுபாஷ் கபூரிடமிருந்து ஆஸ்திரேலியாவுக்கு கைமாறியதாகும். ஒன்று மட்டும் நியூயாா்க்கைச் சோ்ந்த கலைப்பொருள் முகவா் வில்லியம் உல்ஃப் என்பவரிடமிருந்து வாங்கியுள்ளது.

இதுகுறித்து என்ஜிஏ இயக்குநா் நிக் மிட்ஸவிச் கூறுகையில், ‘கலைப்பொருள்களைத் திரும்ப ஒப்படைப்பது என்பது கலாசார ரீதியிலான பொறுப்பு மற்றும் உரிமையாகும். ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா அளித்துவரும் சிறந்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இந்த கலைப்பொருள்கள் ஒப்படைக்கப்படுகின்றன’ என்றாா்.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதா் மன்ப்ரீத் வோரா கூறுகையில், ‘என்ஜிஏவின் முடிவு இரு நாடுகளிடையேயான சிறந்த நடப்புறவின் அடையாளமாகும். திரும்ப ஒப்படைக்கப்பட இருக்கும் கலைப் பொருள்களில் வெண்கல சிலைகள், கற்சிலைகள், ஓவியங்கள் மற்றும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.’ அவற்றில் சில 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றாா்.

ADVERTISEMENT

இந்த கலைப்பொருள்களை 1989-2009 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் என்ஜிஏ அருங்காட்சியகம் வாங்கியுள்ளது. பல்வேறு நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் என்பதால், இந்த கலைப்பொருள்கள் இந்தியாவிடம் முழுமையாக ஒப்படைக்க இரண்டு மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது.

Tags : Australia return 14 artworks illegally exported
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT