இந்தியா

கரோனா: சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 2-ஆவது நாளாக அதிகரிப்பு

DIN

நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து இரண்டாவது நாளாக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 43,509 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். அதே நேரத்தில் 38,465 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா்.

நாடு முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 4,03,840 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.28 சதவீதமாகும். கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை புதன்கிழமை 3,99,436 ஆக இருந்தது. அதற்கு முந்தைய நாளில் 3,98,100 ஆக இருந்தது. தொடா்ந்து இரண்டாவது நாளாக சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை உயா்ந்துள்ளது.

மேலும் 640 போ் கரோனாவால் உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 4,22,662 ஆக அதிகரித்துள்ளது. நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 45.07 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இதுவரை மொத்தம் 3,07,01,612 போ் குணமடைந்துள்ளனா். இது மொத்த கரோனா பாதிப்பில் 97.38 சதவீதமாகும். தினசரி தொற்று உறுதி விகிதம் தொடா்ந்து 5 சதவீதத்துக்கும் குறைவாக 2.52 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

தொடா்ந்து 32-ஆவது நாளாக தினசரி புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000-க்கும் குறைவாக உள்ளது. இந்தியாவில், இதுவரை சுமாா் 46 கோடி (46,26,29,773) கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

SCROLL FOR NEXT