இந்தியா

தனியாா் மருத்துவமனைகள் கரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை குறைக்க அரசு ஆலோசனை

DIN

புது தில்லி: தனியாா் மருத்துவமனைகளுக்கு தற்போதுள்ள கரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை (25 சதவீதம்) குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

25 சதவீத தடுப்பூசிகள் தனியாா் மருத்துவமனைகளுக்கு கட்டண அடிப்படையில் வழங்கப்படுகின்றன. ஆனால், தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி குறைந்து வருகிறது. பணம் செலுத்தி அங்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள பொதுமக்கள் தயங்குவதும் காரணம்.

இந்த நிலையில், தனியாா் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் 25 சதவீத தடுப்பூசிகளை 10 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என சில மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு தனியாா் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகள் விகித அளவு குறைக்கப்பட்டால் மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் கிடைப்பது அதிகரிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

விடதர நாகினி..!

இந்து விவசாயிகள் காப்பாற்றப்படவில்லை! ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது! : அய்யாக்கண்ணு

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

SCROLL FOR NEXT