இந்தியா

மேற்கு வங்கத்தில் ஆகஸ்ட் 15 வரை கரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

29th Jul 2021 05:12 PM

ADVERTISEMENT


மேற்கு வங்கத்தில் ஆக்ஸ்ட் 15-ம் தேதி வரை தளர்வுகளுடன் கரோனா கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் அலை குறித்த வல்லுநர்களின் எச்சரிக்கையை அடுத்து, இந்த முடிவை மேற்கு வங்க அரசு வியாழக்கிழமை எடுத்துள்ளது.

தளர்வுகள்:

  • அரசு நிகழ்ச்சிகளை உள்ளரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுடன் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.  
  • பேருந்துகள், டாக்ஸிகள், ஆட்டோக்கள் 50 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
  • அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்படலாம்.
  • மேற்கு வங்கத்தில் மே 16-ம் தேதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கடைசியாக ஜூலை 30-ம் தேதி நீட்டிக்கப்பட்டது. 
     
Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT