இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,857 பேருக்கு கரோனா

28th Jul 2021 09:49 PM

ADVERTISEMENT


மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,857 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 286 பேர் பலியாகியுள்ளனர், 6,105 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 62,82,914 ஆக உயர்ந்துள்ளது. இதில் 60,64,856 பேர் குணமடைந்துவிட்டனர். 

இறப்பு விகிதம் 2.1 சதவிகிதமாக உள்ளது. குணமடைவோர் விகிதம் 96.53 சதவிகிதம்.

ADVERTISEMENT

மும்பை:

மும்பையில் புதிதாக 404 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமையைக் காட்டிலும் 6 எண்ணிக்கை கூடுதல். மேலும் 382 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6 பேர் பலியாகியுள்ளனர். 
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT