இந்தியா

என்ன பேசுவார் பிரதமர் மோடி? 79-வது மனதின் குரலில் இன்று உரை

25th Jul 2021 08:46 AM

ADVERTISEMENT


பிரதமர் நரேந்திர மோடி 79-வது மனதில் குரல் நிகழ்ச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்றுகிறார்.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு மனதில் குரல் உரையை நிகழ்த்தி வருகிறார் பிரதமர் மோடி. இதுவரை 78 மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றியுள்ளார்.

79-வது மனதின் குரல் நிகழ்ச்சி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு மத்தியில் இன்று வருகிறது. எனவே, ஒலிம்பிக் போட்டிகள் குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் குறித்து பேசுவதற்கான வாய்ப்பும் இருப்பதாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த நிகழ்ச்சியில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் இருக்கும் தயக்கம் குறித்து பேசிய அவர் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார் பிரதமர் மோடி.

ADVERTISEMENT

Tags : pm modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT