இந்தியா

'மக்களின் மனதின் குரல் புரிந்திருந்தால்': ராகுல் காந்தி

DIN

கரோனா தடுப்பூசி விநியோகம் மந்தமாக நடைபெறுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமரிசித்துள்ளார்.

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக உலக நாடுகள் தடுப்பூசி விநியோகத்தை தீவிரமாக மேற்கொண்டுவருகிறது. இருப்பினும், மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடும் பணி மந்தமாக நடைபெற்றுவருகிறது.

குறிப்பாக, பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவிவருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், மக்களின் மனதில் குரல் புரிந்திருந்தால், தடுப்பூசி விநியோகம் மந்தமாக நடைபெற்றிருக்காது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமரிசித்துள்ளார்.

தடுப்பூசி மந்தமாக நடைபெறுவதாக வெளியான செய்தி் குறித்தும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மனதில் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பாவதற்கு முன்பு, ராகுல் காந்தி இந்த விமரிசனத்தை முன்வைத்துள்ளார்.

இந்தாண்டு, டிசம்பர் மாதத்திற்குள் 60 சதவித மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்துவதை மத்திய நோக்கமாக கொண்டுள்ளது. ஆனால், அதற்கு ஒரு நாளைக்கு 93 லட்சம் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

கடந்த ஏழு நாள்களில், சராசரியாக ஒரு நாளைக்கு 36 லட்சம் தடுப்பூசிகளே செலுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஒரு நாளைக்கு சராசரியாக 56 லட்சம் தடுப்பூசிகள் குறைவாக செலுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT