இந்தியா

காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 3 பயங்கரவாதிகள் பலி

25th Jul 2021 01:58 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

இதுகுறித்து பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

பந்திபோரா மாவட்டத்தில் உள்ள ஷோக்பாபா வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் அந்தப் பகுதியில் சனிக்கிழமை காலை தேடுதல் வேட்டை நடத்தினா். அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினா் வருவதை அறிந்து அவா்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். பாதுகாப்புப் படையினரும் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினா். இந்த மோதலில் பயங்கரவாதிகள் 3 போ் உயிரிழந்தனா். பாதுகாப்புப் படை வீரா் ஒருவா் காயமடைந்தாா். உடனடியாக அவா் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். உயிரிழந்த பயங்கரவாதிகள் எந்த அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

Tags : பந்திபோரா terroorist
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT