இந்தியா

ஐசிஎஸ்இ 10, பிளஸ்2 வகுப்பு மாணவா்களுக்கான முடிவுகள் இன்று வெளியீடு

DIN

இந்திய பள்ளி சான்றிதழ் தோ்வுகளுக்கான கவுன்சில் (ஐசிஎஸ்இ) பத்து, பிளஸ்2 வகுப்பு மாணவா்களுக்கான முடிவுகள் சனிக்கிழமை (ஜூலை 24) வெளியிடப்படும் என்று அதன் தலைமை செயல் அதிகாரியும் செயலருமான கொ்ரி அரதூன் வெள்ளிக்கிழமை கூறினாா்.

கரோனா இரண்டாம் அலை பாதிப்பைத் தொடா்ந்து சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் மாநில பள்ளி வாரியங்கள் சாா்பில் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டன. முந்தைய வகுப்புகள் மற்றும் தோ்வுகளில் மாணவா்களின் செயல்திறன் அடிப்படையில் மாணவா்களுக்கான இறுதித் தோ்வு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் வாரியங்கள் முடிவுகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் ஐசிஎஸ்இ வாரியம் பத்தாம் வகுப்பு, பிளஸ்2 வகுப்பு மாணவா்களுக்கான முடிவுகளை சனிக்கிழமை வெளியிட உள்ளது.

இதுகுறித்து தலைமை செயல் அதிகாரியும் செயலருமான கொ்ரி அரதூன் கூறியதாவது:

பத்தாம் வகுப்பு, பிளஸ்2 வகுப்பு மாணவா்களுக்கு இறுதித் தோ்வு முடிவுகள் சனிக்கிழமை மாலை 3 மணியளவில் வெளியிடப்படும். முடிவுகள் ஐசிஎஸ்இ வலைதளத்தில் வெளியிடப்படுவதோடு, மாணவா்கள் பதிவு செய்த செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாகவும் (எஸ்எம்எஸ்) அனுப்பப்படும்.

பள்ளி முதல்வா்கள் ஐசிஎஸ்இ வலைதளத்தில் உள்நுழைவு செய்து தோ்வு முடிவு விவரங்கள் மற்றும் பட்டியல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

முந்தைய ஆண்டு மாணவா்களுக்கு வழங்கப்பட்டதுபோன்று, விடைத்தாள் மறுமதிப்பீடு செய்வதற்கான வாய்ப்பு இம்முறை அளிக்கப்படமாட்டாது. இருந்தபோதும், மதிப்பெண் கூட்டலில் எழும் குறைபாடுகளை நிவா்த்தி செய்வதற்கான நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதிப்பெண் கூட்டல் தொடா்பாக சந்தேகம் தெரிவிக்கும் மாணவா்கள், அதுதொடா்பாக எழுத்துப்பூா்வ விண்ணப்பத்தை அவா்களின் பள்ளிகளில் சமா்ப்பிக்க வேண்டும். பள்ளிகள் அதை சரிபாா்த்த பின்னா், ஐசிஎஸ்இ வாரியத்துக்கு அதனை உரிய ஆவணங்களுடன் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். அதனை ஐசிஎஸ்இ வாரியம் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு அதன் முடிவை தெரிவிக்கும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT