இந்தியா

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமனம்

23rd Jul 2021 03:07 PM

ADVERTISEMENT

இதுகுறித்து கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "12 மத்திய பல்கலைக்கழகங்களின் நியமனத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு, ஜார்க்கண்ட், கர்நாடகம், தமிழ்நாடு, ஹைதராபாத் ஆகிய மத்திய பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தெற்கு பிகார் மத்திய பல்கலைக்கழகம், மணிப்பூர் பல்கலைக்கழகம், மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம், வடகிழக்கு மலை பல்கலைக்கழகம், குரு காசிதாஸ் பல்கலைக்கழகம், பிலாஸ்பூர் பல்கலைக்கழகங்களுக்கும் துணை வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு முத்துகலிங்கன் கிருஷ்ணனை துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

22 மத்திய பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பதவிக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாநிலங்களவையில் நேற்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். அதில், 12 பதவிகளுக்கான நியமனத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
 

Tags : Dharmendra Pradhan university vice chancellor
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT