இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை ஜூலை 26 வரை ஒத்திவைப்பு

DIN

மாநிலங்களவையில் தொடர்ந்து நான்காவது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில், 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களும் 5 அவசரச் சட்டங்களும் நிறைவேற்றப்படவுள்ளது.

இந்நிலையில், பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என கூட்டத்தின் முதல் நாளிலிருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

கூட்டத்தொடரின் நான்காவது நாளான இன்று காலை முதலே மமாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் உத்தரவிட்டார்.

அடுத்தக் கூட்டம் ஜூலை 26ஆம் தேதி காலை 11 மணிக்கு கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT