இந்தியா

ஜூலை 16-ல் முதல்வர்களுடன் மோடி ஆலோசனை

13th Jul 2021 03:00 PM

ADVERTISEMENT

கரோனா பரவல் குறித்து மாநில முதல்வர்களுடன் ஜூலை 16ஆம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை குறைந்து வரும் சூழலில்,சில மாவட்டங்களில் மட்டும் மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், தென் மாநிலங்களான கேரளம், தமிழகம், மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் ஒடிசா மாநில முதல்வர்களுடன் ஜூலை 16ஆம் தேதி காலை 11 மணியளவில் கரோனா பரவல் குறித்து காணொலி மூலம் ஆலோசிக்கவுள்ளார்.

இந்த ஆலோசனையின் போது கரோனா தடுப்பூசி அதிகளவில் மாநிலங்களுக்கு அனுப்புவது குறித்து மாநில முதல்வர்கள் பிரதமரிடம் கோரிக்கை வைக்க வாய்ப்புள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT