இந்தியா

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: ஹரியாணா எம்.எல்.ஏ. ராஜிநாமா

DIN

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து ஹரியாணா மாநிலத்தின் தேசிய லோக் தளம் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அபய்சிங் செளதலா தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் கடந்த 63 நாள்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஹரியாணா மாநிலத்தின் எல்லெனாபாத் சட்டமன்ற உறுப்பினரான அபய்சிங் செளதலா தனது பதவியை ராஜிநாமா செய்தார். தொடர்ந்து செளதலா தனது ராஜிநாமா கடிதத்தை ஹரியாணா சட்டப்பேரவைத் தலைவர் கியான் சந்த் குப்தாவிடம் வழங்கினார்.

அவரது கடிதத்தைப் பெற்றுக் கொண்ட பேரவைத் தலைவர் ராஜிநாமாவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT