இந்தியா

காஷ்மீர் குண்டுவெடிப்பில் ராணுவ ஜவான் பலி: நால்வர் படுகாயம்

27th Jan 2021 07:38 PM

ADVERTISEMENT

 

ஸ்ரீநகர்: காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் புதன் காலை நிகழ்ந்த  குண்டுவெடிப்பில் சிக்கி ராணுவ ஜவான் ஒருவர் பலியாகியுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது:

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள சுபன்போரா பகுதியில் புதன்கிழமை காலை இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு ‘சாலை பாதுகாப்புப் பணியில்’ ஈடுபட்டுள்ள ராணுவத்தின் ‘ராஷ்ட்ரீய ரைபிள்’ படையணியினர் இந்த குண்டுவெடிப்பில் சிக்கியுள்ளனர். அவர்கள் தங்களது ரோந்தின்போது வழக்கமாக சோதனையிடும் பள்ளி வளாகத்தில் அமைந்திருந்த கைவிடப்பட்ட கட்டடம் ஒன்றில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. பயங்கரவாதிகள் திறன் மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டினை இந்தச் சம்பவத்தில் பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் முதல்நாள் இரவு இதனை அங்கு ஒளித்து வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

ADVERTISEMENT

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ராணுவ ஜவான் ஒருவர் சிகிச்சை பலன் அளிக்காமல் தற்போது மரணமடைந்துள்ளார். மேலும் நான்கு பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து முழுவீச்சில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது அந்தப் பகுதி முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்கு கொண்டுவரப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT