இந்தியா

குடியரசு தினம்: இலங்கை பிரதமர் ராஜபட்ச வாழ்த்து

DIN

குடியரசு தினத்தை முன்னிட்டு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச தனது வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார்.

நாட்டின் அரசமைப்புச் சட்டம் கடந்த 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. அதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.  

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு இலங்கை பிரதமர் ராஜபட்ச குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது வாழ்த்து செய்தியில் அவர், “ இலங்கை மக்களின் சார்பாக நான் இந்தியப் பிரதமர் மற்றும் மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவாலிலும் வெற்றி பெறட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக 1966-ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையான வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள் இன்றி குடியரசு நாள் விழா அணிவகுப்பு நிகழ்ச்சிகள் தில்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT