இந்தியா

தெலங்கானாவில் தொடர்ந்து குறைந்துவரும் கரோனா பாதிப்பு

IANS

தெலங்கானா மாநிலத்தில் சமீபமாக கரோனா தொற்று வெகுவாக குறைந்துவருவதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 148 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது. இதையடுத்து ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,93,401 ஆக உயர்ந்தது. மேலும் ஒருவர் தொற்றுக்குப் பலியானதைத் தொடர்ந்து இறப்பு எண்ணிக்கை 1,590 ஆக அதிகரித்துள்ளது,

இதுதொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்குநர் கூறுகையில், 

கிரேட்டர் ஹைதராபாத்தில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து ஐந்தாவது நாளாக 50-க்கும் கீழ் குறைந்துள்ளது. மாநில தலைநகரில் கடந்த 24 மணி நேரத்தில் 35 பேருக்கு புதிதாகத் தொற்று பதிவாகியுள்ளன. ரங்காரெட்டி11, கரீம்நகர் 10 ஆகவும், மீதமுள்ள 31 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாகியுள்ளது. 

மேலும், தொற்று பாதித்து 302 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளதை அடுத்து, குணமடைந்தோர் எண்ணிக்கை 2,88,577 ஆகவும், மீட்பு விகிதம் 98.35 ஆகவும் உள்ளது. தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 3,234 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 19,821 மாதிரிகள் சோதனை செய்துள்ளதையடுத்து நாட்டில் மொத்தம் 76,82,361 சோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT