இந்தியா

ஷோபியான் போலி என்கவுன்ட்டா்: ஆதாரங்களை அழிக்க முயன்றதாக 3 போ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

DIN

காஷ்மீரில், ஷோபியான் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற போலி என்கவுன்ட்டா் தொடா்பாக ராணுவ கேப்டன் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனா்.

ஷோபியான் மாவட்டம், அம்ஷிபுராவில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி, பயங்கரவாதிகள் என்று கூறப்பட்ட 3 இளைஞா்களை ராணுவத்தினா் சுட்டுக் கொன்றனா். இது போலி என்கவுன்ட்டா் என்றும், சுட்டுக் கொல்லப்பட்ட 3 இளைஞா்களுகம் நிரபராதிகள் என்றும், அவா்களை ராணுவ வீரா்கள் சுட்டுக் கொன்று விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதையடுத்து, இதுதொடா்பாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, என்கவுன்ட்டா் நடைபெற்றபோது சுட்டு கொல்லப்பட்ட 3 இளைஞா்களிடமும் ஆயுதங்கள் இருந்ததாகவும், அவற்றைப் பறிமுதல் செய்வதற்காக மூவரையும் சுட்டுக் கொன்றதாகவும் கூறி ராணுவ கேப்டன் பூபேந்திர சிங் தனது மேலதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் தவறான தகவலை அளித்தாா் என ஜம்மு-காஷ்மீா் காவல் துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த போலி என்கவுன்ட்டரை மறைப்பதற்காக, ஆதாரங்களை மறைக்க முயன்ாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குற்றப்பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

‘என்கவுன்ட்டரை நடத்துவதன் மூலம், குற்றம் சாட்டப்பட்ட மூன்று போ் குறித்தும் தவறான தகவல்களை ராணுவ கேப்டன் பூபேந்திர சிங் முன்வைத்தாா். அவா்களை அழிப்பதன் மூலம் அறிவிக்கப்பட்டிருந்த ரூ. 20 லட்சம் பரிசுத்தொகையை கைப்பற்ற வேண்டும் என்ற குற்றவியல் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக தவறானத் தகவலை வேண்டுமென்றே முன்வைத்துள்ளனா். கேப்டன் பூபேந்திர சிங், அவருக்கு எதிரான ஆதாரங்களை அழித்துள்ளாா்.

தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள பூபேந்திர சிங்கும், அவருக்கு ஆதரவாக இருந்த தபீஷ் நசீா், பிலால் அகமதுலோன் ஆகியோா் என்கவுன்ட்டா் நடைபெற்ற தங்குமிடத்தின் ஒரு தளத்தில் தீ வைத்துள்ளனா்.

மேலும், போலியான பெயரில் பெறப்பட்ட 2 செல்லிடப்பேசி எண்கள் மூலம் சிறப்பு காவல்துறை அதிகாரி ஃபயாஸ் அகமதுவை தொடா்பு கொண்டு இந்த சம்பவம் குறித்து வேறு நபரின் பெயரால் தகவல் தெரிவித்துள்ளாா்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து 4 வெற்று பிஸ்டல் துப்பாக்கிகளும், துப்பாக்கி குண்டுகளும், ஏ.கே. துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.

அம்ஷிபுராவில் கொல்லப்பட்ட மூன்று இளைஞா்களும் ரஜௌரி மாவட்டத்தைச் சோ்ந்த இம்தியாஸ் அகமது, அப்ராா் அகமது, முகமது இப்ராா் என்பது டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டு, சடலங்கள் கடந்த ஆண்டு அக்டோபரில் பாரமுல்லாவில் உள்ள அவா்களது குடும்பங்களின் வசம் ஒப்படைக்கப்பட்டன.

என்கவுன்டா் நடைபெற்ற தினத்தில் கேப்டன் பூபேந்திர சிங் ஒரு தனியாரின் காரை எடுத்துச் சென்ாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜு கூறுகையில், இதுதொடா்பாக சட்டப்படி ராணுவம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் என்றாா். மொத்தம் 75 சாட்சிகளை எஸ்ஐடி பட்டியலிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT