இந்தியா

மகாராஷ்டிரத்தில் இன்று 1,804 பறவைகள் பலி

24th Jan 2021 09:41 PM

ADVERTISEMENT


மகாராஷ்டிரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 1,804 பறவைகள் பலியானதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 8-ம் தேதி முதல் இதுவரை மொத்தம் 17,249 பறவைகள் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பறவைகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. பரிசோதனைகளின் முடிவில் 11 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் காரணமாக கோழிகள் இறப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பறவைகளைத் தாக்கும் பறவைக் காய்ச்சல் நோய் கேரளம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம், ஹரியாணா, குஜராத், தில்லி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : bird flu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT