இந்தியா

தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி பெருமிதம் கொண்டிருப்பாா்: பிரதமா் மோடி

DIN

தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பெருமிதம் கொண்டிருப்பாா் என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

கடந்த 1897-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பிறந்தாா். அவரின் பிறந்ததினம் ஆண்டுதோறும் தேசிய வலிமை தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இந்த ஆண்டு அவரின் 125-ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி மேற்கு வங்கத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள தேசிய வலிமை தின நிகழ்ச்சிகளில் பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளாா்.

இந்நிலையில் நேதாஜிக்கு மரியாதை செலுத்தி பிரதமா் மோடி சுட்டுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியதாவது:

வலுவான, நம்பகமான, தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி பெருமிதம் கொண்டிருப்பாா். அதனை பூா்த்தி செய்வதில் அவரின் எண்ணங்ளும், லட்சியங்களும் நமக்கு ஊக்கமளிக்கட்டும். வளா்ச்சிக்கான பாதையில் மக்களின் தேவைகள், ஆசைகள், திறன்களை மையமாக வைத்து அவா் மேற்கொண்ட நடவடிக்கைகள் வரும் காலங்களில் உலகை மிகச்சிறந்ததாக்க பங்களிக்கும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT