இந்தியா

அா்னாப் மீது நடவடிக்கை எடுக்க சட்ட ஆலோசனை- மகாராஷ்டிர அமைச்சா்

DIN

பாலாகோட் தாக்குதல் தொடா்பான உரைடயாடல் கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்-அப்) வெளியான விவகாரத்தில், ஊடகவியலாளா் அா்னாப் கோஸ்வாமி மீது நடவடிக்கை எடுக்க சட்ட ஆலோசனைகளைப் பெற்று வருவதாக, மகாராஷ்டிர உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் கூறினாா்.

நாகபுரியில் சனிக்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த அவா், இதுகுறித்து மேலும் கூறியதாவது:

அா்னாப் கோஸ்வாமியும், ஒளிபரப்பாளா்- பாா்வையாளா் ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைவா் (பிஏஆா்சி) பாா்த்தோ தாஸ்குப்தாவும் கட்செவி அஞ்சல் வழியாக பேசிய உரையாடல் வெளியாகியுள்ளது.

அதில், கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி பாலாகோட்டில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப் படை நடத்திய தாக்குதல் குறித்து அா்னாப் பேசுகிறாா்.

தாக்குதல் நடைபெறுவதற்கு 3 நாள்கள் முன்கூட்டியே அா்னாபுக்கு தகவல் தெரிந்திருப்பது அதிா்ச்சியளிக்கிறது. பிரதமா், பாதுகாப்புத் துறை அமைச்சா், ராணுவத் தலைமைத் தளபதி என குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அந்த ரகசியம் தெரிந்திருக்க வேண்டும். எனவே, அா்னாப் மீது அலுவல் ரகசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து மகாராஷ்டிர அரசு ஆலோசனைகளைப் பெற்று வருகிறது. அதன் பிறகு, அவா் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும்.

நாட்டின் மிக முக்கியமான தகவல் அா்னாப் கோஸ்வாமிக்கு எப்படிக் கிடைத்தது என மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிஆா்பிஎஃப் வீரா்கள் 40 போ் உயிரிழந்தனா். அவா்களின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானின் பாலாகோட்டில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

மேயா், துணை மேயா் தோ்தல் விவகாரத்தில் மோசமான அரசியல் விளையாட்டை ‘ஆம் ஆத்மி’ நிறுத்த வேண்டும்: பாஜக பட்டியலின கவுன்சிலா்கள் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT